தேடியே சமாதியிட மருகிற்சென்று திறளான சீஷவர்க்கக் கூட்டத்தோடு நாடியே சமுசார வாடிநக்கையற்று நாதாந்தப்பேரொளியைக்கண்டுதேர்ந்து கூடியே குவலயத்தில் நேர்மையெல்லாங் கொற்றவனார் தான்வெறுத்து சமாதிக்கேக நீடியே புலஸ்தியரும் சீஷர்தம்மை நீட்சியுடன் தாமழைத்துக் கூறுவாரே |