தானான என்சீஷா யின்னங்கேளு தகமையுள்ள சித்தரமுனி யும்மைக்கண்டு கோனான வுன்குருவு யெங்கென்றாக்கால் கொற்றவனே சமாதியிடஞ் சென்றாரென்று தேனான புலஸ்தியரும் வருநாள்மட்டும் தேர்வேந்த சித்தருக்குப் பணிதிபூண்டு மானான மனோன்மணியைத் தொழுதுபோற்றி மலையோரஞ் சமாதியிட மிருக்கின்றேனே |