நிற்கையிலே புலஸ்தியரா முனிவர்தாமும் நீடான சமாதிதனிலிருந்துகொண்டு அற்புதங்கள் மிகவுரைப்பார் சீஷருக்கு வன்பான மகிமைகளு மெத்தவுண்டு தற்பரனார் புலஸ்தியரும் வருகும்போது தாரிணியில் அதிசயங்கள் மிகநடக்கும் கற்பாறையானதொரு பொதிகைதானும் கடல்தனிலே யதிரலுடன் யரையும்பாரே |