போகின்றேன் தேரைமுனி சித்துகேளும் பொங்கமுடன் வையகத்தை யான்மறந்தேன் சாகின்ற சடலமது யிருந்துமென்ன சதாகாலம் நேமநிஷ்டை கொண்டுமென்ன தாகின்ற பொன்மணியின் ஜோதிபோலுஞ் சதாகாலம் எப்போதும் துலங்கவேண்டும் வேகின்ற நெஞ்சமதை யிதங்கவைத்து வேகமுடன் சதாநித்தம் பணியநன்றே |