எண்ணினார் காயாதிகற்பங்கொண்டு எழிலாகத் தாமிருந்தார் வுலகுதன்னில் நண்ணமுடன் சீஷவர்க்க மனேகம்பேர்கள் நாடினார் தன்வந்திரி பகவான்தன்னை வண்ணமுடன் வெகுகால மிருந்தசித்து வளமையுடன் சதுராதி மார்க்கமெல்லாம் கண்ணபிரான் தானறிந்த சொரூபசித்து காசினியில் அவர்போலுஞ் சொல்லப்போமோ |