தானான பிரம்மமொடு வயிந்திரபேதம் தாக்கான வைகிருது யொக்கத்தானும் பானான யோகமது இருபத்தேழும் பாகமுடன் பாலித்தார் சீடருக்கு கோனான தன்வந்திரி பகவான்தானும் குவலயத்தில் சீடர்மேல் பட்சம்வைத்து தேனான யோகமென்ற மார்க்கந்தன்னை தெளிவுடனே தாமுரைத்தார் தன்வந்திரியாமே |