தானான தன்வந்திரி பகவான்தானும் தன்மையுடன் சீஷருக்குத் தாமுரைப்பார் தேனான கண்மணியே சீஷவர்க்கம் தெளிவுடனே எள்ளவருங் கேட்டிருங்கள் பானான பேரின்பமிசையாசைவிட்டேன் பாங்கான சமுசார வாடிநக்கையற்றேன் மானாம மனோன்மணியை மனதிலெண்ணி வையகத்தினாசையெல்லாம் மறந்திட்டேனே |