பாரப்பா சமாதிதன்னி லிரங்கியல்லோ பத்தாண்டு முடிவுவரையிருப்பேனென்றும் சீரப்பா சிலகாலஞ்சென்றபின்பு சிறப்புடனே வையகத்தில் வருவேனென்றும் காரப்பா சமாதியிடம் வீற்றிருங்கள் காசினியில் வெகுகோடிவதிசயங்கள் நேரப்பா வதிசயங்கள் காணப்போரீர் நேர்மையுடன் சித்தனது வுரைபொடீநுயாதே |