தானான காண்டமது வைந்துக்குள்ளே சாகரத்தின் பெருமையெலாம் சாற்றலாகும் கோனான யெனதையர் காலாங்கிநாதர் குருபாதந்தனை வணங்கி யானுஞ்சொல்வேன் பானான மனோன்மணியாள் முன்னேநிற்க பாடிவைத்தேன் போகரேழாயிரந்தான் மானான நாதாக்கள் என்பேரிற்தான் மனங்கோபங் கொள்ளாமல் மன்னிப்பீரே |