திரும்பியே மனோன்மணியைக்காணவென்று சிலகாலமங்கிருந்து வுளவுகண்டேன் அரும்பொன்மணி நவரத்தின வாசீர்மத்தில் அழகான மனோன்மணியாள் பீடம்கண்டேன் சுரும்புடைய பூந்துடையாள் சொரூபங்கண்டேன் தோற்றமுடன் கண்ணிற்குத் தோற்றலாச்சு கரும்பெனவும் தேன்மாரி பொழியக்கண்டேன் கைலங்கிரி போலிருக்கும் பொடீநுகையாமே |