பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பாருலகில் வெகுகோடி சித்தருண்டு நேரேதான் மனோன்மணியைக் கண்டதில்லை நேர்மையுடன் ஜோதியென்ற ஒளிவுகண்டார் வீரேதான் சொரூபநிலைக்கண்டபோதே விருப்பமுடன் ஜோதிமயந்தன்னிற்தோன்றி கூரேதான் மனோன்மணியை நினைத்தவண்ணம் கொப்பெனவே தெரிசனைப்போல் தோற்றலாச்சே |