தோற்றமுடன் புலிப்பாணி மைந்தாகேளு தொல்லுலகை சுத்திவந்து குளிகைகொண்டேன் காற்றில்லா ராமேஸ்வரந் தானென்னுங்கனமான தனக்கோட்டி கடலைக்கண்டேன் மேற்றிசைக்குக் கீடிநபாகங் கடலோரந்தான் மேலான தென்பொதிகை சமீபமப்பா நாற்றமுள்ள சங்கதுவும் பிறக்கும்ஸ்தானம் நடுக்கடலாந் திட்டொன்று கண்டேன்பாரே |