| பார்த்தேனே பிரிங்கி மகாரிஷியார்தன்னை பட்சமுடன் அடியேனும் அஞ்சலித்து தீர்த்தமுடன் சோடசோபாரத்தோடு திக்காதி பிரிங்கிரிஷியார்முன்னே சேர்த்துமே கரங்குவித்து சிரமேல்வைத்து சிறப்புடனே தான்பணிந்து வஞ்சலித்தேன் பூர்த்தியுடன் மனதுவந்து சாமிபாதம் பொன்னடியை மறுக்காலும் தொழுதிட்டேனே |