| இறங்கியே காலாங்கி நாதர்தம்மை யெழிலான சமாதிதனை தெரிசித்தேன்யான் திறமான காலாங்கிநாதர்தானும் தீரமுடன் யான்வந்தசேதிகண்டு வரமுடனே எந்தனுக்கு வசரீராக வாக்களித்தார் எந்தனது குருபரன்தான் கரங்குவித்து முடிவணங்கி யடியேன்தானும் கர்த்தாவைத் தெண்டனிட்டுப் பணிந்திட்டேனே |