காணுகையில் உந்தனுக்குப் புத்திமானே கடலிலுள்ள மர்மமெல்லாம் கண்ணிற்றோற்றும் தோணுமே மலைப்பாறைக் கல்களெல்லாம் தோற்றுமே யுந்தன்கண்ணாடியாலே பூணவே வழிதடத்தைக் கண்டுமல்லோ புகழான மலைப்பாறையொதுங்கியேதான் நீணவே நெடுந்தூரஞ் செல்லலாகும் நீராவிக் கண்ணாடிக் கப்பல்தானே |