பாரேதான் வடகோடியாழிதன்னில் பாங்குடனே குளிகைகொண்டு யானுஞ்சென்றேன் நேரேதான் குளிகைகொண்டு செல்லும்போது நேர்மையுடன் ஆசீர்மமமொன்றுகண்டேன் ஊரதுபோல் கடலாழிநடுமையத்தில் ஓகோகோ தீவதுதான் கண்டேனப்பா சேரேதான் குளிகையது சென்றுயானும் சேர்ந்தேனே தீவுதனில் கிட்டினேனே |