உண்டான சித்துமகா ரிஷியார்தாமும் ஓகோகோ நாதாக்கள் ஆசீர்மந்தான் கண்டேனே பச்சையென்ற மலையின்மீதில் காவலர்கள் ஆயிரம்பேர் சூடிநந்திருக்க திண்டான வாசீர்மங் கிண்டியேதான் தீரமுடன் குளிகைதனை பூண்டுகொண்டு அண்டமதில் தான்பரந்து மேலேநின்று வப்பனே குளிகைகொண்டு இறங்கினேனே |