ஏகவே சீனபதிப்போகவென்று எழிலான குளிகைதனைப்பூண்டுகொண்டு வேகமுடன் சீனபதிவந்தேன்யானும் வெட்டவெளி ஆகாயங்கோட்டைதன்னில் சாகமுடன் குளிகையிட்டு இறங்கியேதான் சட்டமுடன் மாண்பரெல்லாங் கண்டேன்யானும் சோகமுடன் சீஷவர்க்கங்கண்டபோது சுத்தியெனை வந்துமல்லோ சூடிநந்தார்பாரே |