சூடிநந்தாரே யெனையும் சீஷவர்க்கம் சூட்சாதியானதொரு மார்க்கமெல்லாம் தாடிநந்துமே எந்தனையும் கேட்கும்போது சட்டமுடன் யானுரைத்தேன் பச்சைதன்னை ஆடிநந்ததொரு கடல்தனிலே மலைதானுண்டு அப்பனே வடகோடியாழிதன்னில் வாடிநந்துமே பச்சைமலை தன்னிலப்பா வாகுடனே வெகுகால மிருந்தேன்பாரே |