உண்டான வாசீர்மம் தன்னிற்சென்று ஓகோகோ நாதாக்கள் பெருமைதன்னை கண்டேனே வடகோடி யாசீர்மத்தில் கனமான சித்தர்முனி ரிஷிகள்யாவும் தொண்டருடன் வாசீர்மந்தன்னைச்சுற்றி சொரூபமென்ற சித்தொளிவு சொல்லொண்ணாது அண்டர்முனி ராட்சதர்கள் காணாநாடு வப்பனே குளிகைகொண்டு சென்றேன்தானே |