தானான குருபதத்தைக் காணவென்று தாக்கான மனோன்மணியாள் அருளும்பெற்று கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருமொழிசொற்படிக்கி தேனான குளிகைகொண்டு சென்றுமல்லோ தெளிவுடனே யாசீர்மம் தன்னில்நின்றேன் பானான கமபிளியாஞ் சித்தர்தாமும் பாற்கடலில் எந்தனையும் பார்திட்டாரே |