செப்பினார் கெம்புதனை எடுக்கவல்லோ சேதுபந்தம் அயோத்திக்கு மேற்கேயப்பா ஒப்பவே கெம்பாறு வடமுகத்தில் ஓங்கியதோர் வோடையுண்டு குகைதானுண்டு வெப்புடனே வடகோடி யாற்றையப்பா விண்ணுலகில் கண்டவர்கள் யாருமில்லை நெப்பமுடன் எந்தனுக்கு வுளவுசொல்லி நேர்மையுடன் ஓடைதனை காண்பித்தாரே |