| போமப்பா பச்சையுப்பு தின்றாயானால் புகழான வேருவையில் சுக்கிப்போடும் வேமப்பா அமுரியிலே இரங்கிப்போகும் வெறிப்பானச் சடமெல்லாம் தளர்ந்துபோகும் போமப்பா சடமலைந்து நரைமெத்தாகி புகழான தந்தமெல்லாம் கழன்றுபோகும் நாமப்பா கட்டியதோர் உப்பைத்தின்று நலமான சமாதியிலே இருந்திட்டேனே |