சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துரைராஜ சுந்தரனே சொல்லக்கேளும் வெல்லவே யானைமலை யடிவாரத்தில் மேன்மையுடன் சுனையொன்று குகைதானுண்டு புல்லவே சுனையருகில் போகும்போது புகழான கல்லடியாஞ் சித்தரப்பா மல்லர்கள்போல் நூறுபேர் கொலுவிருப்பார் மகத்தான சுனையருகே காவலுண்டே |