தந்தாரே யின்னமொரு மார்க்கங்கேளு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாசொல்வேன் அந்தமுள்ள அகஸ்தியர்க்கு வுகந்தசீஷன் அறிவுள்ள கண்மணியாம் தேரைதானும் சொந்தமுடன் வெகுகாலம் அகஸ்தியர்தானும் தோற்றமுடன் நற்சீஷனென்றுசொல்லி விந்தையுள்ள வதிசயங்கள் வையகத்தில் விருப்பமுடன் கண்டவரை சொன்னார்பாரே |