பாரேதான் கண்டவரை மார்க்கமெல்லாம் பாங்குடனே தாமுரைத்தார் தேரையார்க்கு நேரேதான் சங்கலத்தார் கூட்டமப்பா நேரான சித்தர்முனி ரிஷிவர்க்கத்தில் சீரேதான் சமால்தனிமுனியார் சீஷன் சிறப்பான திரணாக்கியமுனிவருக்கு நீரேதான் மூளைதனில் தலைநோக்கோடு நேர்மையுடன் வந்துமல்லோ வருத்தலாச்சே வருத்தமுடன் மூளைதனில் பத்திநின்ற வாகர்ன தலைநோக்கை யென்னசொல்வோம் பொருத்தமுடன் நோடீநுகளிலே வருந்தியல்லோ பொலிவான துன்பமது மேலதாகி திருத்தமுடன் நோயதனைத் தீர்ப்பதற்கு திறமான வகஸ்தியரை யழைக்கச்சொல்ல அருத்தமது தானறிந்த கும்பயோனி அறிந்தாரே ஞானமென்ற திருஷ்டியாலே |