தேறையென்ற முனியான சித்துதாமும் தெளிமையுடன் அகஸ்தியனார் வுடன்சென்றேபின் பாரையென்ற மலைமிதில் தானிருக்கும் பான்மையுள்ள சங்கத்தார் கூட்டந்தன்னில் ஆறையாஞ் சமூகமது முன்னேநின்று வகஸ்தியரும் சீஷனுடன் போயிருக்க சூறையென்ற சங்கத்துப்புலவரெல்லாம் சூட்சமுடன் அகஸ்தியர்க்கு வுரைத்திட்டாரே |