கவனிக்கும் வேளையிலே கத்திகொண்டு கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க மவுனமென்ற மூளைதனில் தேறைதானும் மார்க்கமுடன் கல்வியல்லோ கொண்டுநிற்க புவனமென்ற குறடாவில் எடுக்கப்போனார் புகழான தேறையர்முனிவர்தானும் கவனமென்ற பாணியினால் எடுக்கதந்திரம் சாற்றினார் தேறையர் சாற்றினாரே |