இருந்தேனே இன்னும்வந்து யானும்கண்டேன் எழிலான சீஷவர்க்கமென்ன சொல்வேன் பொருந்தவே சொற்பனமும் யானுங்கண்டேன் பொங்கமுடன் மறுபடியும் சமாதிக்கேக வருந்தியே பராபரத்தின் செயலினாலே வன்மையுள்ள சொற்பனமும் மெடீநுயேயாகும் திருந்தியே யான்கண்ட சொற்பனத்தில் திறமாக நடப்பதுவும் வுண்மையாமே |