மருளாமற் போகவல்லோ வாதஞ்சொன்னேன் மாண்டிறந்து போகாமல் காயசித்திச்சொன்னேன் இருளான வெளிகான யோகஞ்சொன்னேன் ஏழுவகைக் காணவல்லோ குளிகைச்சொன்னேன் அருளான மனமடங்க போதஞ்சொன்னேன் வாநந்தமாவதற்கு வஸ்துசொன்னேன் பொருளான குருபதத்தில் தொண்டுபண்ணி போக்கோடே உப்பைமுந்திக் கட்டியாடே |