காணவே கடுவெளியாஞ் சித்துதம்மை கனமுடனே யடியேனும் வணங்கியல்லோ பூணவே காட்டகத்தைக் காணவந்தேன் புனிதமுள்ள ரிஷியாரே விண்ணப்பங்கேள் தோணவே பவளமென்ற காட்டகத்தை தொல்லுலகில் யான்பார்க்கவேண்டுமென்றேன் நீணவே யடியேனும் கேட்கும்போது நீதியுடன் எந்தனுக்கு வுரைத்தார்தாமே |