ஆச்சப்பா மத்தகசந் தன்னைப்போல அழகான கதண்டுகளு மங்கேயுண்டு பேச்சப்பா பேசுமுன்னே சிகரம்போகும் பேரான கதண்டுகளுமங்கேயுண்டு மூச்சடங்க மேல்விழுகுங் கதண்டுதானும் முனையான குதிரையின் சிரசிபோலாம் கூச்சலுடன் தானிருக்கும் வனந்தானப்பா குவலயத்தில் கண்டவர்கள் இல்லைதானே |