ஒண்ணாத காட்டகத்தில் தண்டுதானும் வுத்தமனே யுந்தனையுங் கொல்லும்பாரு அண்ணாந்து பார்த்தாக்கால் சிரசும்போகும் வப்பனே அவ்வனத்தே சொல்லொண்ணாது மண்ணாளும் ராஜாதிராசரெல்லாம் மகாவனத்தை வந்துமல்லோ மடிந்துபோனார் குண்ணான மலைதனையே கண்டபோது கொற்றவனே குலைநடுங்கி இறந்தார்தாமே |