நீக்கியே எந்தன்மேல் பட்சம்வைத்து நீதியுடன் யாதரிக்க வேண்டுமென்று நோக்கமுடன் போகரிஷி முனிவர்தாமும் நொடியான பவமகற்றி காக்கவேணும் வாகுடனே எந்தனுக்கு வரமுந்தந்து வண்மையுடன் பாதுகாத் தருளென்றார்பார் நாக்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்பாதம் நன்மையுடன் வணங்கியல்லோ பணிந்திட்டேனே |