வழியான கதண்டுகளும் எந்தன்மீதில் வண்மையுடன் மனதுவந்து எந்தனைத்தான் பழியதுவும் நேராமல் எந்தன்மீதில் பட்சமுடன் கதண்டுரிஷி வலுமையாலே குழியான குண்ணுக்கல் கானார்தம்மில் கொற்றவனே யெனையழைத்துப்போகலாச்சு அழியாத வாசனங்கள் எந்தனுக்கு வன்புடனே கொடுத்தார் பணியலாச்சே |