பார்க்கையிலே குருடனவன் கண்திறப்பான் பாங்கான செவிடனுக்குக் சத்தங்கேட்கும் தீர்க்கமுடன் ஊமையனும் வார்த்தைசொல்வான் திறமான சப்பாணி நடப்பான்பாரு ஏற்கவே யித்தாதி மகிமையெல்லாம் எழிலாகத் தானடக்கும் வருங்காலத்தில் ஆர்க்கவே போகருக்கு சொன்னவாக்கு அப்பனே வுலகுதனில் நடக்குந்தானே |