போகித்து கடுவெளியார் சித்துதாமும் பொங்கமுடன் சீடருக்குத் தாமுரைத்து ஆதித்தன் வந்துதிக்கும் வேலைதன்னில் வன்பான சமாதியிட பக்கல்சென்று வாதித்து சீடருடன் விடையும்பெற்று வளமான குழிதனிலே இறங்கியல்லோ பேதித்து பாறைதன்னை சீடருக்கு பிரியமுடன் மூடவென்று விடைதந்தாரே |