இட்டாரே சித்துமுனி வந்தபோது எழிலான சீஷவர்க்கங்கூட்டங்கூடி திட்டமுடன் அவர்பாதம் தொழுதிட்டார்கள் சிறப்பான மாண்பரெல்லாம் வணங்கிநின்றார் சட்டமுடன் சித்துமுனி சொன்னவாக்கு தாரணியில் மெடீநுயாச்சு பார்க்கும்போது வட்டமுடன் கடுவெளியார் சித்துதாமும் வண்மையுடன் லோகவதிசயங் கேட்டாரே |