போகரென்று சொல்லவென்றால் லோகந்தன்னில் பொங்கமுடன் கண்டவர்கள் தானடுங்க யோகமுடன் திக்கெல்லாம் திரண்டுமல்லோ எந்தனையுங் காணுதற்கு வெகுஜனங்கள் சாங்கமுடன் கண்டல்லோ யடியேனுக்கு சட்டமுடன் சோடசோபசாரஞ்செடீநுது வேகமுடன் நிதியெடுக்க எந்தனைத்தான் மேதினியில் அழைத்தவர்கள் கோடியாமே கோடியாம் நிதியெடுக்க என்னைத்தானும் கொற்றவர்கள் கூட்டியல்லோ தேசந்தன்னில் நீடியே திரவியங்கள் கண்டெடுக்க நிட்களமாடீநு வுறுதிமிகப்பாடுசெடீநுது நாடியே சாத்திரத்தி னுளவுபார்த்து நாதாந்த சித்தொளிவை மனதிலுண்ணி வாடியே திரியாமல் அடியேன்தானும் வண்மையுடன் கொடுக்கலுற்றேன் நிதிகள்தானே |