தாமான நிதிகளெல்லாம் அடியேன்தானும் தன்மையுடன் ஜெயமுனியார் பக்கலாக பூமானாம் ரிஷியின் மகாதேவர்பக்கம் பொங்கமுடன் கொண்டல்லோ யொப்பிவைத்தேன் சாமானமானதொரு திரவியத்தை சட்டமுடன் எந்தனுக்காடீநு கொடுத்துவிட்டார் ஆமானமாகவே யடியேன்தானும் வன்புடனே சீனபதிக் கொடுசென்றேனே |