பூசியதைச் சுண்ணாம்புக் குகையில்வைத்துப் புடம்போட்டு எடுத்துப்பார் தவளநீராம் ஆசியதைக் கடுங்காரச் செயநீர்குத்தி அப்பனே பனியில்வைக்கச் செயநீராகும் தேசியதில் சரக்குகளில் சுருக்குப்போட செயமான மெழுகாகும் வேதையாகும் ஆசியதை எண்ணாதே கற்பமுண்ணு அருணனைப்பொல் சிவப்பாகும் காயந்தானே |