கண்ணான கண்மணியே போகநாதா கைலாச ரிஷிகள்முதல் மெச்சும்பாலா விண்ணுலகில் நவகோடி ரிஷிகள்தம்மில் விருப்பமுடன் தேர்ந்தெடுத்த வினோதபாலா தண்ணா சுடர்மணியே சூட்சாசூட்சம் தாரிணியில் கற்றறிந்த லோகநாதா வண்ணமுடன் மேதினியில் கீர்த்திபெற்ற வைராக்கியம் போகரென்று மதித்திட்டாரே |