| ஆச்சென்று சொல்லுகையில் அடியேன்தானும் வன்புடனே மனதுவந்து தேவர்தானும் பாச்சலுடன் தன்பதியி லழைத்துக்கொண்டு பாங்கான குண்ணருகின் மேலேசென்று வீச்சுடனே பறக்குகின்ற வசுவந்தன்னை விருப்பமுடன் எந்தனுக்குக் காண்பித்தார்பார் மூச்சடங்கி குளிகையனைக் கையிலேந்தி மூர்க்கமுடன் புரவியின்மேல் ஏறினேனே |