இறங்கினேன் கிக்கிந்தா மலைதானுள்ளே எழிலான சீஷவர்க்கந்தன்னைக்கண்டேன் சுறங்கமென்ற குகைதனிலே சீஷர்தாமும் சூட்சமுடன் எந்தனையுங் கொண்டுசென்றார் மறங்களுடன் மலைதனிலே கோட்டையுண்டு மகத்தான கோட்டைக்கு வாசல்நான்கு திறமுடனே வாசல்வழி யென்னைத்தானும் திகழுடனே கொண்டுசென்றார் சீஷர்காணே |