பார்த்தேனே நாதாந்த சித்துதாமும் பாங்கான மூன்றாங்கால் வாசல்சென்றேன் தீர்த்தமுடன் சிவலிங்கந் தன்னைக்கண்டேன் தீர்க்கமுள்ள சித்தொருவர் அங்கிருந்தார் ஆர்க்கவே நாலாங்கால் பதிதானப்பா வன்புடனே வாசல்வழி சென்றேன்யானும் நாற்கமல சமாதிதனில் வீற்றிருக்கும் நடராஜசுந்தரனைப் பார்த்திட்டேனே |