பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாங்கான காட்டகத்தே சித்தர்கூட நேரேதான் யானுமது வாசம்பூண்டு நெடுங்கால மங்கிருந்தேன் காட்டகத்தே சீரேதான் சீஷருடன்கொண்டுசென்று சிறப்பாக விருக்கையிலே ரிஷியார்தாமும் பேரேதான் கூப்பிட்டு திருவேலர்தாமும் பேரான மகிமைதனைக்கூறினாரே |