வந்ததொரு ரிஷியாருஞ் சமாதிகண்டு வளமையுடன் மாண்பர்களை நோக்கங்கொண்டு அந்தமுடன் அடியார்கள் தன்னைநோக்கி வன்புடனே மனதுவந்து வார்த்தைசொல்வார் இந்ததொரு வையகத்தின் ஆசைவிட்டேன் யெழிலான சமாதிக்கு செல்வேனப்பா சொந்தமுடன் பாறையது மூடியல்லோ சுத்தமுடன் காத்திருங்கள் என்றிட்டாரே |