பார்க்கவே நவலோகம் நூற்றுக்கொன்று பாச்சிடவே பதினாறு மாற்றுமாகும் ஆர்க்கவே தினம்பணந்தான் உண்டாயானால் அருணனைப்போல் தேகமுமாம் கண்ணொளியேயீறும் சேர்க்கவே காயமது கர்ப்பாந்தகாலம் திரையாமல் பண்ணிவைக்கும் நரையோயில்லை சார்க்கவே சூதத்தை ஷணத்தில்கொல்லும் கண்ணிமைக்குள் பாஷாணம் சத்துமாமே |