| கண்டாரே போகரிஷி நாதர்தாமுங் காசினியில் கிக்கிந்தா மலையைக்கண்டு அண்டமுடன் தேவாதிதேவரெல்லாம் வன்புடனே தானிறங்கும் மலையென்றெண்ணி கொண்டர்களுஞ் சித்தர்முனி இருக்கும்நாடு துரைராச கிக்கிந்தா மலைவளத்தை சண்டமாருதம்போலே போகர்தானும் சட்டமுடன் கண்டுமல்லோ இறங்கினாரே |