கொண்டதொரு போகரிஷிநாதர்தம்மை குன்றான மலைதனிலே இருக்குஞ் சித்தர் கண்டுமே போகரிஷிநாதர்பக்கல் கனமுடனே சித்தர்முனி கூட்டமெல்லாம் மண்டலத்தில் காணாதவதிசயங்கள் மகத்தான மலைமீதிற் கண்டோமென்று விண்டுமே தங்கள் தங்கள் மனதிலெண்ணி விருப்பமுடன் போகர்பக்கல் வந்திட்டாரே |